தமிழ் சரிநிகர் யின் அர்த்தம்

சரிநிகர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒப்புநோக்கும்போது) ஏற்றத் தாழ்வின்றி எல்லா விதத்திலும் சமம்.

    ‘எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சரிநிகராகப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்’
    ‘நேற்று அரசியலுக்கு வந்தவன் எனக்குச் சரிநிகர் சமானமாகப் போட்டியிடப்போகிறானா?’
    ‘மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் சரிநிகர் சமானமாகப் பார்க்க வேண்டும்’