தமிழ் சரிபார் யின் அர்த்தம்

சரிபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

 • 1

  (கணக்கு, கையெழுத்து முதலியவற்றை) முறையாக அல்லது சரியாக உள்ளதா என ஒப்பிடுதல்.

  ‘கையெழுத்தைச் சரிபார்த்துவிட்டுப் பணம் கொடு’
  ‘அறிவிப்புப் பலகையில் இருந்த விபரங்களுடன் பயணச்சீட்டைச் சரிபார்த்தான்’

 • 2

  (இயந்திரம் முதலியவற்றைப் பயன்படும் நிலையில் உள்ளதா என) பரிசோதித்தல்.

 • 3

  பழுதுபார்த்தல்; சரிசெய்தல்.

  ‘மாவு அரைக்கும் இயந்திரத்தைச் சரிபார்க்க வேண்டும்’