தமிழ் சரியாகப் போயிற்று யின் அர்த்தம்

சரியாகப் போயிற்று

வினைச்சொல்

  • 1

    ஒரு நிலைமையைப் பற்றி ஒருவர் கொள்ளும் எரிச்சல், அவநம்பிக்கை போன்றவற்றை உணர்த்தும் வினைமுற்று.

    ‘‘நீங்கள்தான் அவரிடம் சொல்லி என் மகனுக்கு வேலைவாங்கித் தர வேண்டும்.’ என்று நான் சொன்னதற்கு அவர் ‘சரியாகப் போயிற்று; அவருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காதே!’ என்றார்’