தமிழ் சரியாகு யின் அர்த்தம்

சரியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  (நோய்) குணமாதல்.

  ‘இப்போது அவனுக்கு உடம்பு சரியாகிவிட்டது’
  ‘ஒரு வாரம் மருந்து சாப்பிட்டால் போதும். குடல்புண் சரியாகிவிடும்’
  ‘வெறும் மருந்தினால் மனநோய் சரியாகாது’
  ‘உன் நோய் முற்றிலுமாகச் சரியாக நாளாகும்’

 • 2

  (மோசமான நிலைமை) சீராதல்; இயல்பான நிலைக்கு வருதல்.

  ‘கொஞ்சம் பொறுத்துக்கொள், எல்லாம் சரியாகிவிடும்’
  ‘ஒரு மாதத்தில் அலுவலக நிலைமை சரியாகிவிடாதா?’
  ‘மின்அழுத்தம் இரவு ஒரு மணிக்குச் சரியாகி விட்டது’
  ‘புதுச் சூழல் பழகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்’