தமிழ் சரிவு யின் அர்த்தம்

சரிவு

பெயர்ச்சொல்

 • 1

  (மலை, சாலை முதலியவற்றில்) உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக இருக்கும் பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.

  ‘மலைச் சரிவில் தேயிலைத் தோட்டம்’
  ‘சாலையின் சரிவில் பேருந்து உருண்டு விழுந்துகிடந்தது’

 • 2

  சரிந்து விழுதல்.

  ‘பனிப்பாறைச் சரிவு காரணமாகப் பத்துப் பேர் பலி’

 • 3

  நல்ல அல்லது உயர்ந்த நிலையிலிருந்து மோசமான அல்லது தாழ்ந்த நிலைக்கு இறங்குதல்; வீழ்ச்சி.

  ‘எண்ணெய் வித்துகளின் விலையில் திடீர்ச் சரிவு ஏற்பட்டுள்ளது’
  ‘அவருடைய செல்வாக்கின் சரிவு தொடங்கிவிட்டது’