தமிழ் சீருடை யின் அர்த்தம்

சீருடை

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி மாணவர், ராணுவத்தினர் முதலியோர் அல்லது தொழிற்சாலை, ஆய்வுக்கூடம் முதலியவற்றில் பணி செய்வோர்) குறிப்பிட்ட நிறத்தில் குறிப்பிட்ட பாணியில் (ஒரே மாதிரியாக) அணியும் உடை.

    ‘நாங்கள் படிக்கும்போதெல்லாம் பள்ளிகளில் சீருடை கிடையாது’
    ‘கடற்படையினரின் சீருடை வெள்ளை நிறத்தில் இருக்கும்’