தமிழ் சீற்றம் யின் அர்த்தம்

சீற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (பாம்பு, காளை முதலியவற்றின்) உக்கிரமான மூச்சு ஒலி.

  ‘ராஜ நாகத்தின் சீற்றம் ஆளை நடுங்கவைத்தது’

 • 2

  (கடல், எரிமலை போன்றவற்றின்) கொந்தளிப்பு.

  ‘கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படும்’

 • 3

  உயர் வழக்கு மிகக் கடுமையான கோபம்.

  ‘தான் செய்த சிறு தவறுக்கு அப்பா இப்படிச் சீற்றம் கொள்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை’