தமிழ் சற்று யின் அர்த்தம்

சற்று

வினையடை

 • 1

  கொஞ்சம்; சிறிது.

  ‘சற்றுத் தள்ளி நில்லுங்கள்!’

 • 2

  தயவுசெய்து.

  ‘சற்றுப் பேசாமல் இருக்கிறீர்களா?’
  ‘சற்று இங்கே வாருங்கள்’

தமிழ் சற்று யின் அர்த்தம்

சற்று

பெயரடை

 • 1

  சிறிது; கொஞ்சம்.

  ‘சற்று நேரம் கழித்து வா!’
  ‘அவருக்கு என்மேல் சற்று வருத்தம்’

தமிழ் சற்று யின் அர்த்தம்

சற்று

இடைச்சொல்

 • 1

  (குறிப்பிடப்படும்) தன்மையை மிகுவிக்கவோ அல்லது குறைக்கவோ பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘என் மகளுக்கு காப்பி சற்றுக் கசப்பாகத்தான் இருக்க வேண்டும்’
  ‘சற்று வேகமாக நடக்கக் கூடாதா?’