தமிழ் சற்றைக்கு யின் அர்த்தம்

சற்றைக்கு

பெயரடை

  • 1

    சிறிது நேரத்துக்கு.

    ‘சற்றைக்கு முன்புதான் செய்தித்தாளில் அந்தச் செய்தியைப் படித்தேன்’
    ‘சற்றைக்கு முன்பு கேட்ட அதே பாடலை மற்றொரு தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது’
    ‘எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர் சற்றைக்கொரு முறை என்னைத் திரும்பிப் பார்த்தார்’