தமிழ் சலசலப்பு யின் அர்த்தம்

சலசலப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (விரும்பத்தகாத அல்லது ஏற்றதாக இல்லாத ஒன்று நிகழும்போது அதை எதிர்கொள்கிறவர்கள் இடையில் ஏற்படும்) குழப்பம் அல்லது எதிர்ப்பு.

  ‘வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது’
  ‘புதிய சட்டம் சில மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது’

 • 2

  அச்சுறுத்தும் பேச்சு.

  ‘இந்தச் சலசலப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’