தமிழ் சலனம் யின் அர்த்தம்

சலனம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) பாதிப்பால் உணர்வுகள் கிளறப்பட்ட நிலை.

  ‘இந்தக் கதை படிப்பவரின் மனத்தில் சலனத்தை ஏற்படுத்தும்’
  ‘அவர் சொன்னது துயரமான செய்திதான். இருந்தாலும் அவர் முகத்தில் சலனம் இல்லை’
  ‘அவளுடைய நெருக்கம் அவனைச் சலனம் அடையச் செய்தது’

 • 2

  (வாழ்க்கையில்) பாதிப்பு.

  ‘வாழ்க்கை சலனம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது’

 • 3

  அசைவு.

  ‘விளக்குச் சுடரின் சலனம்’
  ‘சலனம் இல்லாமல் கட்டைபோல் கிடந்தான்’