தமிழ் சல்லி யின் அர்த்தம்

சல்லி

பெயர்ச்சொல்

 • 1

  (முற்காலத்தில் புழக்கத்தில் இருந்த) மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்.

  ‘கையில் ஒரு சல்லி இல்லை; என்ன செய்வது?’
  உரு வழக்கு ‘சல்லி பெறாத விஷயத்துக்குச் சண்டையா?’
  உரு வழக்கு ‘இவன் சல்லிக் காசுகூடப் பெறமாட்டான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் இஸ்லாமியர் வழக்கில்) பணம்.

  ‘மாமி சேவல் வாங்கிக்கொண்டு சல்லி கொடுத்துவிட்டுப் போனார்கள்’