தமிழ் சலுகை யின் அர்த்தம்

சலுகை

பெயர்ச்சொல்

 • 1

  விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு.

  ‘சிறுதொழில் செய்ய முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு பல சலுகைகள் வழங்குகிறது’
  ‘இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன’

 • 2

  (விதிமுறை தளர்த்தப்படாத நிலையில் ஒருவர் பெறும்) தனிப்பட்ட முறையிலான சுதந்திரம் அல்லது உரிமை.

  ‘அவர் உனக்கு இவ்வளவு சலுகைகள் செய்கிறார் என்றால் அது உன்மேல் உள்ள அன்பினால்தான்’
  ‘மேலதிகாரி உனக்கு உறவினர் என்ற காரணத்தினாலேயே நீ இவ்வளவு சலுகைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது’