தமிழ் சவாரி யின் அர்த்தம்

சவாரி

பெயர்ச்சொல்

 • 1

  (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லுதல்.

  ‘ஊட்டியில் குதிரைச் சவாரி செய்தோம்’
  ‘கிராமத்துக்குப் போக மாட்டு வண்டிச் சவாரிதான்’

 • 2

  வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி மேற்கொள்ளும் பயணம்.

  ‘சவாரிக்கு வண்டி வருமா?’
  ‘சவாரி வண்டியா, சொந்த வண்டியா?’

 • 3

  வாடகை வண்டியை அமர்த்திக்கொள்பவர்.

  ‘எனக்கு இன்று காலையிலிருந்து இரண்டு சவாரிதான் கிடைத்தது’
  ‘சவாரிக்காகக் காத்திருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்காரர்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு மாடு அல்லது குதிரையால் இழுத்துச்செல்லப்படும் வண்டி, நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முதலில் கடத்தல் என்ற முறையில் நடத்தப்படும் போட்டி.

  ‘பொங்கலன்று மாட்டு வண்டிச் சவாரி நடக்கும்’