தமிழ் சவால் யின் அர்த்தம்

சவால்

பெயர்ச்சொல்

 • 1

  கடினமான ஒன்றைச் செய்யுமாறு ஒருவருக்கு (அவரால் அதைச் செய்ய முடியாது என்ற தொனியில்) விடுக்கும் அழைப்பு; அறைகூவல்.

  ‘நீ என் மேல் சொல்லும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்று சவால்விட்டார்’

 • 2

  ஒன்றைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஒருவருடைய திறமையைச் சோதிக்கும் வகையில் இருப்பது.

  ‘சவாலான பல வழக்குகளைச் சந்தித்திருப்பதாக அந்த மூத்த வழக்கறிஞர் கூறினார்’
  ‘வறுமையை ஒழிப்பதுதான் இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்’