தமிழ் சவு யின் அர்த்தம்

சவு

வினைச்சொல்சவுக்க, சவுத்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு நமுத்தல்.

தமிழ் சீவு யின் அர்த்தம்

சீவு

வினைச்சொல்சீவ, சீவி

 • 1

  (கத்தி, அரிவாள் முதலியவற்றால்) மெல்லிய சுருளாக வெட்டி நீக்குதல்.

  ‘கொஞ்சம் இந்த பென்சிலைச் சீவிக்கொடு!’
  ‘மாட்டுக் கொம்பைச் சீவி வர்ணம் பூசினான்’

 • 2

  (உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாக்கு போன்றவற்றை) தகடுபோல் மெல்லிய துண்டுகளாக வெட்டுதல் அல்லது நறுக்குதல்.

  ‘பஜ்ஜி போடுவதற்கு வாழைக்காய் சீவிவிட்டாயா?’
  ‘உருளைக்கிழங்கை இன்னும் மெல்லியதாகச் சீவு!’

 • 3

  காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் தோலைக் கத்தியைக் கொண்டு நீக்குதல்.

  ‘தாத்தா மாம்பழத்தின் தோலைச் சீவும் அழகே தனி’
  ‘தோலைச் சீவியபின் வாழைக்காயைத் துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்’

 • 4

  வெட்டுதல்.

  ‘எதிர்த்துப் பேசினால் கழுத்தையா சீவிவிடுவான்?’

தமிழ் சீவு யின் அர்த்தம்

சீவு

வினைச்சொல்சீவ, சீவி

 • 1

  (முடியை) சீப்பினால் இழுத்து ஒழுங்குபடுத்துதல்; (தலை) வாருதல்.

  ‘நேர்வகிடு எடுத்துச் சீவினால்தான் உனக்கு அழகாக இருக்கும்’

தமிழ் சீவு யின் அர்த்தம்

சீவு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு ஈர்க்குச்சி.