தமிழ் சாகுபடி யின் அர்த்தம்

சாகுபடி

பெயர்ச்சொல்

 • 1

  (நிலத்தில் நெல், கரும்பு, புகையிலை முதலியவற்றை) விளைவித்தல்; பயிரிடுதல்.

  ‘கடும் வறட்சியால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது’
  ‘கரும்புச் சாகுபடியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்’
  ‘இந்த மாநிலத்தில் மழை நீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது’
  ‘பணப்பயிர்ச் சாகுபடி’
  ‘வெற்றிலைச் சாகுபடி’
  ‘பருத்திச் சாகுபடிக்குத் தொழுவுரம் இடுவது நல்லது’
  ‘சாகுபடிச் செலவு’
  ‘மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் சம்பா சாகுபடிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’