தமிழ் சாசனம் யின் அர்த்தம்

சாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    (உயில், கல்வெட்டு போன்ற) ஆவணம்.

    ‘இந்த வீட்டை உனக்குச் சாசனம் செய்துகொடுக்க அப்பா ஒப்புக்கொண்டுவிட்டார்’
    ‘கோயிலின் உட்பிராகாரச் சுவரில் சோழர் காலச் சாசனம் ஒன்று உள்ளது’

  • 2

    (பெரும்பாலும் அரசர்கள் அல்லது அரசுகள் செய்துகொள்ளும்) எழுதப்பட்ட ஒப்பந்தம்.