தமிழ் சாட்சி யின் அர்த்தம்

சாட்சி

பெயர்ச்சொல்

 • 1

  சம்பவம் நிகழ்ந்ததை நேரில் பார்த்தவர்.

  ‘நடந்த கொலைக்கு இரு சிறுவர்கள்தான் சாட்சி’
  ‘நீ அவருக்குப் பணம் கொடுத்தாய் என்பதற்கு யார் சாட்சி?’

 • 2

  (உயிலில், பத்திரத்தில் போடப்பட்டிருக்கும்) கையெழுத்து உண்மையானது என்று உறுதி தருபவர்.

  ‘கடன் பத்திரத்தில் யார் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்?’