தமிழ் சாட்டை யின் அர்த்தம்

சாட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும்) பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் கொண்ட சாதனம்.

 • 2

  சவுக்கு.

  ‘கையில் சாட்டையை வைத்துக்கொண்டு சத்தம் வரச் சுழற்றினான்’

 • 3

  (பம்பரத்தைச் சுழலச் செய்வதற்கான) நீண்ட நூல் கயிறு.

  ‘கீழே சுற்றிக்கொண்டிருந்த பம்பரத்தைச் சாட்டையால் எடுத்துத் தம்பியின் கையில் விட்டான்’