தமிழ் சாதகபாதகம் யின் அர்த்தம்

சாதகபாதகம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயலைச் செய்வதால் ஏற்படும்) நன்மையும் தீமையும்; அனுகூலங்களும் பாதிப்புகளும்.

  ‘வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதில் உள்ள சாதகபாதகங்களைப் பற்றி யோசித்துவிட்டுப் பிறகு முடிவெடு’
  ‘தனியார்மயமாக்குவதின் சாதகபாதகங்களை எடுத்துரைக்கும் கருத்தரங்கு’
  ‘எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சாதகபாதகங்களை எடைபோட்ட பிறகுதான் அவர் இறுதி முடிவு எடுப்பார்’
  ‘இதனால் சாதகபாதகம் எது இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே’