தமிழ் சாத்து யின் அர்த்தம்

சாத்து

வினைச்சொல்சாத்த, சாத்தி

 • 1

  (கதவு, ஜன்னல் போன்றவற்றை) மூடுதல்.

  ‘வெளியே போகும்போது வாசல் கதவைச் சாத்திவிட்டுப் போ!’
  ‘சாரல் அடிக்கிறது, ஜன்னலைச் சாத்து’

 • 2

  (ஒன்றின் மேல்) சாய்ந்த நிலையில் இருக்கச் செய்தல்.

  ‘குடையை மூலையில் சாத்தி வை!’

 • 3

  (தெய்வத்துக்கு மாலை முதலியவை) அணிவித்தல்.

  ‘அனுமாருக்கு வடை மாலை சாத்துவது வழக்கம்’

தமிழ் சாத்து யின் அர்த்தம்

சாத்து

வினைச்சொல்சாத்த, சாத்தி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அடித்தல்.

  ‘அவனைக் கழியால் சாத்த வேண்டும் போல் இருந்தது’

தமிழ் சாத்து யின் அர்த்தம்

சாத்து

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் மரம் அல்லது கழி.