தமிழ் சாதனம் யின் அர்த்தம்

சாதனம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு வேலையைச் செய்வதற்கு உதவும் அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக்கூடியதுமான கருவி.

  ‘சமையல் அறைச் சாதனங்கள்’
  ‘தகவல்தொடர்புச் சாதனங்கள்’
  ‘கருத்தடைச் சாதனம்’

 • 2

  எண்ணம், கருத்து முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுவது.

  ‘கலை மனிதனின் வெளிப்பாட்டுச் சாதனம்’
  ‘திரைப்படம் என்ற சக்தி வாய்ந்த சாதனத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (‘இயற்கை’ என்ற சொல்லோடு வரும்போது) பொருள்.

  ‘நிலம் போன்ற இயற்கைச் சாதனங்கள்’