சாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாதி1சாதி2

சாதி1

வினைச்சொல்சாதிக்க, சாதித்து

 • 1

  சாதனை புரிதல்; (கடினமானவற்றை முயற்சியின் மூலம்) நிறைவேற்றுதல்.

  ‘வாழ்க்கையில் பெரிதாக என்ன சாதித்துவிட்டோம்?’
  ‘பணம் சாதிக்காததைப் பாசம் சாதித்துவிட்டது!’

 • 2

  தான் கூறியதையே பிடிவாதமாகத் திரும்பத்திரும்பக் கூறுதல்.

  ‘கொலையைப் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் சாதித்துவிட்டனர்’
  ‘மன்னிப்புக் கேட்காதது சரி என்று சாதிக்காதே!’

சாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாதி1சாதி2

சாதி2

பெயர்ச்சொல்