தமிழ் சான்றளி யின் அர்த்தம்

சான்றளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    (சான்றிதழ், ஆவணம் முதலியவற்றின்) நகல் உண்மையானது என்று (உரிய அதிகாரி முதலியோர்) கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதியளித்தல்.

    ‘விண்ணப்பத்துடன் சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலை இணைத்து அனுப்பவும்’
    ‘நீதிமன்ற உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்’