தமிழ் சாப்பிடு யின் அர்த்தம்

சாப்பிடு

வினைச்சொல்சாப்பிட, சாப்பிட்டு

 • 1

  (உணவை) உட்கொள்ளுதல்; உண்ணுதல்.

  ‘இரவில் இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டேன்’
  ‘‘நன்றாக வயிறு நிறையச் சாப்பிடுங்கள்’ என்றார் அவர்’
  உரு வழக்கு ‘இவனை இன்னும் வளரவிட்டால் நம்மையே சாப்பிட்டுவிடுவான்!’

 • 2

  (பானம்) குடித்தல்; (மாத்திரை) விழுங்குதல்.

  ‘காப்பி சாப்பிடுங்கள்!’
  ‘மாத்திரை சாப்பிட மறக்காதே!’
  உரு வழக்கு ‘மூன்றாவது பிள்ளை அப்பாவைச் சாப்பிட்டுவிட்டது’

 • 3

  அபகரித்தல்.

  ‘எத்தனை பேர் காசைச் சாப்பிட்டிருப்பான் அவன்?’
  ‘கட்சிப் பணத்தைச் சாப்பிட்டுவிட்டதாக அவர்மேல் குற்றச்சாட்டு எழுந்தது’