தமிழ் சாம்பல் யின் அர்த்தம்

சாம்பல்

பெயர்ச்சொல்

 • 1

  (மரம், கரி முதலியவை) எரிந்து கிடைக்கும் தூள்.

  ‘அடுப்புச் சாம்பலால் பாத்திரம் தேய்த்தாள்’
  உரு வழக்கு ‘என்னை எதிர்த்தால் உன்னைச் சாம்பலாக்கிவிடுவேன் என்று என்னை அவர் மிரட்டினார்’

 • 2

  இறந்தவரை எரித்தபின் கிடைக்கும் தூள்; அஸ்தி.

  ‘எங்கள் தாத்தாவின் சாம்பலைக் கன்னியாகுமரியில் கரைத்தார்கள்’

 • 3

  மேற்குறிப்பிட்ட தூளுக்கு இருப்பதைப் போன்ற வெளிர் நிறம்.

  ‘சாம்பலும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்தது அந்தப் பறவை’
  ‘சாம்பல் நிறப் பூனை’