தமிழ் சாம்பல் பூ யின் அர்த்தம்

சாம்பல் பூ

வினைச்சொல்பூக்க, பூத்து

 • 1

  (கங்கின் வெப்பத் தன்மை குறைந்து அதன்மேல்) சாம்பல் படிதல்/(மரம், காய் முதலியவற்றில்) பூஞ்சாணம் படிதல்.

  ‘திரும்பி வந்து பார்த்தபோது அடுப்பு அணைந்து சாம்பல் பூத்திருந்தது’
  ‘கலங்கலான தண்ணீர் பட்டுப் புல் சாம்பல் பூத்திருந்தது’

 • 2

  (உடல் சாம்பல்போல்) வெளுத்தல்.

  ‘அவளுடைய உடல் மெலிந்து சாம்பல் பூத்திருந்தது’
  ‘உன் உதடு ஏன் சாம்பல் பூத்திருக்கிறது?’