தமிழ் சாமம் யின் அர்த்தம்

சாமம்

பெயர்ச்சொல்

 • 1

  இரவு அல்லது நள்ளிரவு.

  ‘சாமத்தில் எழுப்பிக் கேட்டாலும் அவர் உதவி செய்வார்’
  ‘இந்தச் சாமத்தில் வந்து கதவைத் தட்டுவது யார்?’

 • 2

  (பெரும்பாலும் கோயில்களில் இரவுப் பூஜையைக் குறித்து வரும்போது) மூன்று மணி நேரம் கொண்ட ஒரு கால அளவு.

  ‘கோயிலில் மூன்றாம் சாம பூஜை நடந்துகொண்டிருந்தது’

 • 3

  அருகிவரும் வழக்கு (பொதுவாகக் காலத்தைக் குறிப்பிடும்போது) மூன்று மணி நேரம் கொண்ட கால அளவு.

  ‘சம அளவு வெள்ளெருக்கம் பாலும் ஒரு ரூபாய் எடை கற்பூரமும் சேர்த்துக் கல்வத்தில் இட்டு ஒரு சாமம் வெய்யிலில் வைக்க வேண்டும்’
  ‘ஒருநாளில் பகலில் நான்கு சாமமும் இரவில் நான்கு சாமமும் அடங்கும்’