தமிழ் சாய் யின் அர்த்தம்

சாய்

வினைச்சொல்சாய, சாய்ந்து, சாய்க்க, சாய்த்து

 • 1

  (ஒன்று) நேர் நிலையிலிருந்து பக்கவாட்டில் தாழ்தல்; ஒன்றின் மேல் சரிவான நிலையில் அமைதல்.

  ‘அவள் சுவர் ஓரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்’
  ‘பைசா நகரின் சாய்ந்த கோபுரம்’
  உரு வழக்கு ‘அவர் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை வகிக்கிறார்’

 • 2

  (மரம், கம்பம் போன்றவை) விழுதல்.

  ‘பலத்த காற்றால் பல தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன’
  ‘தூக்கத்தில் அருகில் இருந்தவர் மேல் சாய்ந்து விழுந்தான்’

 • 3

  (சூரியன் மறைந்து பொழுது) கழிதல்.

  ‘அந்தி சாயும் நேரம்’
  ‘பொழுது சாயும் முன்பே மாடுகள் வீடு வந்து சேர்ந்துவிட்டன’

 • 4

  (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஜம்பம்) பலித்தல்.

  ‘என்னிடம் உன் ஜம்பம் சாயாது’

 • 5

  (கிரிக்கெட்டில் விக்கெட்) விழுதல்.

  ‘இருபது ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை அணியின் முதல் விக்கெட் சாய்ந்தது’

தமிழ் சாய் யின் அர்த்தம்

சாய்

வினைச்சொல்சாய, சாய்ந்து, சாய்க்க, சாய்த்து

 • 1

  நிமிர்ந்த நிலையில் அல்லது செங்குத்தாக இருப்பதன் மேல் பகுதியைத் தாழ்த்துதல்.

  ‘அவள் தலையைச் சாய்த்து என்னைப் பார்த்தாள்’
  ‘பேனாவைச் சாய்த்துப் பிடித்து எழுதத் தொடங்கினார்’
  ‘செப்புத் தவலையைச் சாய்த்துப் பார்த்துவிட்டு ‘தண்ணீர் இல்லை’ என்றாள்’

 • 2

  (மரம் முதலியவற்றை) விழச் செய்தல்; வீழ்த்துதல்.

  ‘விஷமிகள் யாரோ மரங்களை வெட்டிச் சாய்த்துச் சாலையில் போட்டிருந்தார்கள்’
  ‘கலவரக்காரர்கள் கூட்டத்திற்குள் புகுந்து கண்ணில் தென்பட்ட ஆட்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர்’

 • 3

  (படுப்பதற்காக உடலை) கிடத்துதல்.

  ‘இப்போதுதான் தலையைச் சாய்த்தேன்; அதற்குள் பால்காரர் வந்துவிட்டார்’

 • 4

  (கிரிக்கெட்டில் பந்துவீசி எதிரணி ஆட்டக்காரரை) ஆட்டமிழக்கச் செய்தல்.

  ‘ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்த இர்ஃபான் பதான் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்’