தமிழ் சாயம் யின் அர்த்தம்

சாயம்

பெயர்ச்சொல்

 • 1

  துணி, பாய் முதலியவற்றிற்கு நிறம் சேர்க்கப் பயன்படும் ரசாயனக் கலவை.

  ‘கோரைப் பாய்க்குச் சாயம் போட வேண்டும்’
  ‘கறுப்புச் சாயம் ஏற்றிய முடி’

 • 2

  (ரசாயனக் கலவையில் நனைத்து எடுப்பதால் துணி முதலியவற்றில் ஏற்படும்) நிறம்.

  ‘புடவை வாங்கி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் சாயம் போகிறது’
  ‘திட்டுத்திட்டாகச் சாயம் போன சட்டை’