தமிழ் சாயல் யின் அர்த்தம்

சாயல்

பெயர்ச்சொல்

  • 1

    (தோற்றம், செயல், தன்மை முதலியவற்றில் மற்றொருவரை அல்லது மற்றொன்றை) நினைவுபடுத்தும் ஒத்த தன்மை.

    ‘அப்பாவின் சாயலில் மகன்’
    ‘பிற எழுத்தாளர்களின் சாயல் தன் எழுத்தில் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்’
    ‘அவருடைய பேச்சில் விரக்தியின் சாயல் தெரிந்தது’