தமிழ் சார் யின் அர்த்தம்

சார்

வினைச்சொல்சார, சார்ந்து

 • 1

  (மற்றொருவரை) ஆதரவாக நம்பியிருத்தல்.

  ‘மூன்றாம் உலக நாடுகள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வளர்ச்சியடைந்த நாடுகளையே சார்ந்துள்ளன’
  ‘யாரையும் சார்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்காது’

 • 2

  (ஒன்று மற்றொன்றை) பொறுத்து அமைதல்.

  ‘கல்வியின் தரம் ஆசிரியர்களின் தரத்தைச் சார்ந்தே அமையும்’

 • 3

  (ஒரு தன்மை, நிலை, பொறுப்பு முதலியவை ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) உரியதாக இருத்தல்; உரித்தாதல்.

  ‘வருமான வரியை வசூலிக்கும் பொறுப்பு அரசையே சாரும்’
  ‘என்னைக் கவிஞனாக்கிய பெருமை என் நண்பனையே சாரும்’
  ‘நான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை உண்டு’

தமிழ் சார் யின் அர்த்தம்

சார்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு உயர் பதவி வகிக்கும் அல்லது வயதில் மூத்தவராக இருக்கும் ஆண்களை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்.

 • 2

  பேச்சு வழக்கு (கல்வி நிறுவனத்தில்) ஆண் ஆசிரியர்.

  ‘உனக்குக் கணக்குப் பாடம் நடத்துவது சாரா, டீச்சரா?’

தமிழ் சார் யின் அர்த்தம்

சார்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வீட்டின் அமைப்பைக் குறிக்கும்போது) கட்டு.

  ‘நாற்சார் வீடு’
  ‘எட்டு சார் வீடு’
  ‘உன்னுடைய பழைய வீடு எத்தனை சார் வீடு?’