தமிழ் சார்பாக யின் அர்த்தம்

சார்பாக

வினையடை

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்.

  ‘அமைச்சரின் சார்பாக அவரது செயலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்’
  ‘நூலக ஊழியர் சார்பாக இந்த மாலையை அமைச்சருக்கு அணிவிக்கிறேன்’
  ‘குற்றவாளியின் சார்பாக வாதாட வழக்கறிஞர் எழுந்தார்’

 • 2

  (ஒருவரை) ஆதரித்து.

  ‘நீ எப்போதும் உன் நண்பன் சார்பாகவே பேசுவாய்’