சாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாரம்1சாரம்2சாரம்3

சாரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (இலை, காய் அல்லது மூலிகை போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும்) சாறு.

  ‘மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட சாரம்’

 • 2

  (ஒரு நூலின் அல்லது கதை, கட்டுரை போன்றவற்றின்) மையக் கருத்து.

  ‘‘ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்’ என்பதே புத்த மதக் கொள்கையின் சாரம்’
  ‘அவருடைய பேச்சின் சாரம் இதுதான்’

 • 3

  (எழுத்தின் அல்லது பேச்சின்) சுவையூட்டும் தன்மை.

  ‘சாரம் இல்லாத பேச்சாக இருக்கிறதே!’

சாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாரம்1சாரம்2சாரம்3

சாரம்2

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி) கம்புகளை அல்லது இரும்புக் குழாய்களை ஊன்றி அவற்றின் மேல் பலகைகளைப் பரப்பி உருவாக்கப்பட்ட தள அமைப்பு.

  ‘அறுபது அடி உயரத்தில் சாரம் அமைத்துத் தளம் போடும் வேலை நடக்கிறது’
  ‘சாரத்தில் நின்றுகொண்டு கட்டடத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார்கள்’

சாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாரம்1சாரம்2சாரம்3

சாரம்3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு கைலி; லுங்கி.