தமிழ் சால யின் அர்த்தம்

சால

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பாராட்டத்தக்கதற்கு அடையாக வரும்போது) மிகவும்; மிக.

  ‘பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளச் செய்த முடிவு சாலச் சிறந்தது’
  ‘காந்தியடிகளின் கருத்துகள் இக்காலத்திற்கும் சாலப் பொருந்தும்’

தமிழ் சால் யின் அர்த்தம்

சால்

பெயர்ச்சொல்

 • 1

  ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்.

 • 2

  (துணி வெளுப்பவர் பயன்படுத்தும்) பெரிய மண் பானை.

தமிழ் சால் யின் அர்த்தம்

சால்

பெயர்ச்சொல்

 • 1

  உழும்போது நிலத்தில் கொழு ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம்.

 • 2

  (நிலத்தை ஒரு முறை கலப்பைகொண்டு செய்யும்) உழவு.

  ‘இன்னும் இரண்டு சால் ஓட்டினால் நிலம் விதைப்பதற்குத் தயாராகிவிடும்’