தமிழ் சால்வை யின் அர்த்தம்

சால்வை

பெயர்ச்சொல்

 • 1

  (தோளைச் சுற்றி அணிந்துகொள்ளும்) மென்மையாக நெய்யப்பட்ட அலங்காரத் துணி.

  ‘தலைவருக்கு மாலைகளும் சால்வைகளும் அணிவிக்கப்பட்டன’
  ‘காஷ்மீர் சால்வை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (தோளில் அங்கவஸ்திரமாகப் போட்டுக்கொள்ளும் அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்ளும்) மடிப்புகள் கொண்ட நீளமான துணி.

  ‘பெரியவர்களைக் கண்டால் தோளில் இருக்கும் சால்வையை எடுத்துவிடு’
  ‘கோயிலுக்குள் போகும்பொழுது சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டு போ’