தமிழ் சாஸ்திரம் யின் அர்த்தம்

சாஸ்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  மதங்கள், சம்பிரதாயங்கள், நீதிநெறி அல்லது பண்டைய கலை, அறிவியல் போன்றவற்றைக் குறித்த நூல்.

  ‘மனுசாஸ்திரம்’
  ‘நாட்டிய சாஸ்திரம்’
  ‘காம சாஸ்திரம்’

 • 2

  (சாஸ்திரத்தில் கூறப்பட்டு) கடைப்பிடிக்கப்படுவது; சம்பிரதாயம்.

  ‘காலையில் குளித்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்பது சாஸ்திரம்’

 • 3

  அருகிவரும் வழக்கு (ஏதேனும் ஒரு அறிவியல்) துறை; இயல்.

  ‘வான சாஸ்திரம்’
  ‘கணித சாஸ்திரம்’
  ‘பூகோள சாஸ்திரம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு சோதிடம்.