தமிழ் சிக்கல் யின் அர்த்தம்
சிக்கல்
பெயர்ச்சொல்
- 1
எளிமையாக அல்லது எளிதாக இல்லாதது; எளிதில் தொடர்புபடுத்த முடியாத பல கூறுகளைக் கொண்ட தன்மை.
‘சிக்கலாக அமைந்துள்ள எழுத்து வடிவங்களைக் கணிப்பொறிக்காக எளிமையாக்கியிருக்கிறார்கள்’‘அவர் எழுதிய சில கவிதைகள் மிகவும் சிக்கலானவை’‘மிகவும் சிக்கலான திட்டம்’ - 2
தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை; பிரச்சினை.
‘அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள்’‘அசைவற்ற கேமராவை வைத்துப் பாய்கிற குதிரையைப் படம் எடுப்பது சிக்கலாக இருந்தது’ - 3
சிக்கு.
‘நூலில் சிக்கல் விழுந்துவிட்டது’