தமிழ் சிக்கு யின் அர்த்தம்

சிக்கு

வினைச்சொல்சிக்க, சிக்கி

 • 1

  (வெளியில் வர முடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு) மாட்டிக்கொள்ளுதல்.

  ‘தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொண்டது’
  ‘சகதியில் வண்டிச் சக்கரம் சிக்கிக்கொண்டது’

 • 2

  (பிரச்சினை, விபத்து போன்றவற்றுக்கு) உள்ளாதல்; அகப்படுதல்.

  ‘அநாவசியமாக இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொள்ள நான் தயாராக இல்லை’
  ‘வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்பதற்கு மீட்புக் குழு விரைந்தது’
  ‘பிரபல தொழிலதிபர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்’

 • 3

  (குற்றவாளி முதலியோர்) பிடிபடுதல்.

  ‘கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான்’
  ‘வெகு நாட்களாகக் காவலர்களிடம் சிக்காமல் தப்பிவந்த திருடன் பிடிபட்டான்’

 • 4

  (மறைத்து வைக்கப்பட்டிருப்பதோ தேடப்படுவதோ) அகப்படுதல்; கிடைத்தல்.

  ‘கடையைச் சோதனையிட்டதில் ஏராளமான ஆபாசப் புத்தகங்கள் சிக்கின’
  ‘கடன் கேட்கலாம் என்று பார்த்தால் நண்பர்கள் யாரும் சிக்கவில்லை’

தமிழ் சிக்கு யின் அர்த்தம்

சிக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை.

  ‘நூலில் சிக்கு விழுந்துவிட்டது’
  ‘சிக்கை எடுப்பதற்குப் பொறுமை இல்லையா?’

தமிழ் சிக்கு யின் அர்த்தம்

சிக்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் சேரும் அழுக்கு.

  ‘சிக்குப் பிடித்த தலையணை உறையை மாற்று’