தமிழ் சிகரங்கட்டு யின் அர்த்தம்

சிகரங்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (மீன்கொத்தி, பருந்து போன்ற பறவைகள் தங்கள் இரையைக் கொத்திக் கவ்வுவதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து) ஒரே இடத்தில் பறந்தபடி இருத்தல்.

    ‘ஏரிக்கு மேலே சிகரங்கட்டிப் பறந்துகொண்டிருந்த கழுகு தண்ணீரில் பாய்ந்து மீனைக் கவ்வியது’