தமிழ் சிகரம் யின் அர்த்தம்

சிகரம்

பெயர்ச்சொல்

 • 1

  மலையின் பிற பகுதிகளைவிட உயரமாக இருக்கும் பகுதி; மலை உச்சி.

 • 2

  (ஒரு நிகழ்ச்சியின்) சிறப்பான பகுதியாக அமைவது; (குறிப்பிட்ட துறையின் அல்லது குறிப்பிட்ட தன்மை, பண்பு முதலியவற்றின்) உயர்ந்த நிலை; உச்சம்.

  ‘புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ சிறுகதையை அவருடைய சாதனையின் சிகரமாகச் சில விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்’
  ‘அவள் பொறுமையின் சிகரம்’
  ‘தன் முதல் படத்திலேயே புகழின் சிகரத்தை அடைந்த நடிகர் அவர்’

 • 3

  (கோயில்) கோபுரத்தின் உச்சிப் பகுதி.

  ‘இந்தக் கோயில் விமானத்தின் சிகரம் எண்பட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு திருவிழாக் காலத்தில் கோயிலின் முன் பக்கத்தில் உயரமாகப் போடப்படும் பெரிய பந்தல்.

  ‘வெடி, ஒலிபெருக்கி, சிகரம், மேளம் என்று கோயில் திருவிழா சிறப்பாகவே நடத்தப்பட்டது’