தமிழ் சிகரம் வை யின் அர்த்தம்

சிகரம் வை

வினைச்சொல்

  • 1

    மற்ற எல்லாவற்றையும்விட (மிகச் சிறப்பாக இருப்பதாலோ மிக மோசமாக இருப்பதாலோ) தனித்துத் தெரிதல்.

    ‘மரண தண்டனை குறித்த அவரது கட்டுரை இந்தத் தொகுப்புக்குச் சிகரம் வைக்கிறது’
    ‘தொடர் வெற்றிகளுக்குச் சிகரம் வைத்தாற்போல ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையையும் வென்றது’
    ‘எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் காவல்துறை அதிகாரி ஒருவரே கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது’