தமிழ் சிக்கனம் யின் அர்த்தம்

சிக்கனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்றைத் தேவையான அளவு மட்டும் கவனமாகச் செலவு செய்யும் அல்லது பயன்படுத்தும் முறை.

  ‘எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் மாதக் கடைசியில் பணத்திற்குத் திண்டாட வேண்டியிருக்கிறது’
  ‘தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்’
  ‘நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது’
  ‘சிக்கனமான முறையில் குடும்பம் நடத்தினால் சேமிக்க முடியும்’

 • 2

  (கதை, கவிதை முதலியவற்றில் சொற்களை) கச்சிதமாகவும் அளவாகவும் பயன்படுத்தும் முறை.

  ‘கவிதை எழுதும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது சொல் சிக்கனம்’