தமிழ் சிங்கம் யின் அர்த்தம்

சிங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும்விட பலம் வாய்ந்ததாக நம்பப்படும்) செம்பழுப்பு நிற உடலையும் வால் நுனியில் குஞ்சம் போன்ற முடியையும் உடைய (பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த) காட்டு விலங்கு.

    ‘ஆண் சிங்கத்திற்குப் பிடரியில் மயிர் உண்டு’
    ‘‘நான் இந்தக் காட்டுக்கே ராஜா. நீ என்னையே எதிர்க்கிறாயா?’ என்று சினத்துடன் நரியைப் பார்த்துச் சிங்கம் கேட்டது’