தமிழ் சிட்டாய்ப் பற யின் அர்த்தம்

சிட்டாய்ப் பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    (ஒருவர் ஒரு இடத்தை விட்டு அகலுவதைக் குறிக்கும்போது) மிக விரைவாகச் செல்லுதல்; விரைந்து நீங்குதல்.

    ‘பள்ளிக்கூட மணி அடித்ததும் சிறுவர்கள் வீட்டுக்குச் சிட்டாய்ப் பறந்தார்கள்’
    ‘கடிதத்தைக் கொடுத்த கணமே தபால்காரர் சைக்கிளில் ஏறிச் சிட்டாய்ப் பறந்துவிட்டார்’