தமிழ் சிணுங்கல் யின் அர்த்தம்

சிணுங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய அழுகை.

    ‘குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டது’

  • 2

    (பொய்க் கோபத்தால் அல்லது வெட்கத்தால்) மெலிதாக முகத்தைச் சுழிக்கும் அல்லது முனகும் செயல்.

    ‘உனக்கு இந்தப் புடவை நன்றாக இல்லை என்றதும் அவள் முகத்தில் ஒரு சிணுங்கல்’