தமிழ் சிணுங்கு யின் அர்த்தம்

சிணுங்கு

வினைச்சொல்சிணுங்க, சிணுங்கி

 • 1

  மெல்லிய குரலில் அழுதல்; முனகுதல்.

  ‘மகன் தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக்கொண்டே எழுந்தான்’
  ‘வழி முழுவதும் சிணுங்கியபடி வந்தது குழந்தை’
  உரு வழக்கு ‘வெகுநேரமாகத் தொலை பேசி சிணுங்கிக்கொண்டிருந்தது’

 • 2

  (முகத்தைச் சுளித்துப் பொய்க் கோபத்தில் அல்லது வெட்கத்தில்) செல்லமாக முனகுதல்.

  ‘பேட்டி தர வேண்டும் என்றதும் நடிகை சிணுங்கினாள்’

 • 3

  வட்டார வழக்கு சுருங்குதல்.

  ‘தொட்டதும் செடி சிணுங்கிற்று’

 • 4

  (மழை) மெலிதாக அல்லது விட்டுவிட்டுத் தூறுதல்.

  ‘இரவு முழுதும் மழை சிணுங்கிக்கொண்டே இருந்தது’
  ‘மழை இன்னும் விடாமல் சிணுங்கிக்கொண்டிருந்தது’