தமிழ் சித்தசுவாதீனம் யின் அர்த்தம்

சித்தசுவாதீனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிந்திக்கும் திறனை உடைய அல்லது சிந்தனையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை.

    ‘சித்தசுவாதீனம் உள்ளவன் பேசுகிற மாதிரியாகவா அவன் பேசுகிறான்!’
    ‘என் மகனுக்குச் சித்தசுவாதீனம் இல்லை. அதனால் அவன் எது செய்தாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’