தமிழ் சித்திரம் யின் அர்த்தம்

சித்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  (தூரிகை முதலியவற்றால் வரையப்படும்) கலையழகு உள்ள படம்; ஓவியம்.

  ‘இயற்கை அழகை அவர் சித்திரமாக வரைந்துள்ளார்’
  ‘ராஜா ரவிவர்மாவின் சித்திரங்கள் புராணக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை’
  ‘கணிப்பொறியைக் கொண்டு சித்திரம் வரையலாம்’

 • 2

  எழுத்தால், பேச்சால் தரப்படும் விவரணை.

  ‘இது தமிழ் அறிஞர் ஒருவரைப் பற்றிய சித்திரம்’
  ‘நாளைக் காலை தொழில் வளர்ச்சிபற்றிய சித்திரம் ஒலிபரப்பாகும்’
  ‘உரைநடைச் சித்திரம்’

 • 3

  அருகிவரும் வழக்கு திரைப்படம்.

  ‘புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த வண்ணச் சித்திரம்’